விஜய் அஜித்துக்கு போட்டியாக வந்த மைக் மோகன்..ACTION காட்சிகளில் அதிரடி காட்டி அசத்தல்

மைக் மோகன் என்றால் தெரியாத நபர்கள் இன்று வரை யாரும் இருக்கமாட்டார்கள்.அந்த அளவிற்கு ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் இவர்.இவர் படத்தில் இடம் பெற்றுள்ள பல பாடல்களும் ஹிட் அடித்து இவருக்கு மைக் மோகன் என்ற பெயரை பெற்றுத்தந்தது.இவருக்கெனே பெரும் ரசிகர்கள் கூட்டமே அந்த நேரத்தில் இருந்தது.இவர் படம் வெளியாகும் நாள் திரையரங்குகள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தான் ஓடும்,அந்த அளவிற்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர்.ரஜினி கமல் படங்களுக்கு நிகரான வசூலையும் வரவேற்பினையும் பெற்று தமிழ் சினிமாவையே அசர செய்து தன்னை திரும்பி பார்க்க செய்தார் மோகன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் திருமண புகைப்படங்கள் இதோ

விஜய் அஜித்துக்கு போட்டியாக வந்த மைக் மோகன்..ACTION காட்சிகளில் அதிரடி காட்டி அசத்தல் 1

விளம்பரம்

இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியாகிய கன்னட படம் ஆன கோகிலா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்தினை தொடர்ந்து கன்னடம் ,மலையாளம் மற்றும் தெலுங்கு என படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு மூடு பணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வேறு மொழிகளில் கிடைக்காத வரவேற்பு தமிழில் கிடைத்ததால் தமிழ் படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் மோகன்.பல வெற்றிப்படங்களை இவர் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.நடிகராக மட்டும் இல்லாமல் தமிழில் அன்புள்ள காதலுக்கு என்ற படத்தினை இயக்கி இயக்குனராகவும் சினிமாவில் கால் தடம் பதித்து விட்டார்.

கட்டாயம் படிக்கவும்  விக்கியுடன் ஐபிஎல் பார்க்க வந்த நடிகை நயன்தாரா புகைப்படங்கள் இதோ

விஜய் அஜித்துக்கு போட்டியாக வந்த மைக் மோகன்..ACTION காட்சிகளில் அதிரடி காட்டி அசத்தல் 2

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை கொடுத்த மோகன் சில வருடங்களாக படத்தில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகி விட்டார்.இது இவரது ரசிகர்ளுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்தது.தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் களம் இறங்கியுள்ளார்.இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கம் ஹரா படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.படத்தில் கதாநாயகியாக குஷ்பு நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.ரசிகர்களும் இப்படத்திற்கு ஆவலாக காத்து இருக்கின்றனர்.இந்நிலையில் இவர் படப்பிடிப்பில் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டை செய்யும் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது.இந்த வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்களின் தொகுப்பு இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “விஜய் அஜித்துக்கு போட்டியாக வந்த மைக் மோகன்..ACTION காட்சிகளில் அதிரடி காட்டி அசத்தல்”

  1. மோகன் சார் அவர்கள் எப்போதுமே யாருக்கும் போட்டியாக இருந்ததில்லை…எல்லா தரப்பிலிருந்தும் மோகன் அவர்களை நேசிக்க கூடிய உள்ளங்களே அதிகம்… அலட்டல் இல்லாத தன்னடக்கமான அவரது நடிப்பிற்கு இன்றும் என்றும் மோகன் சார் அவர்களை வாழ்த்தும் நல்லவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்… நீண்ட இடைவெளிக்கு பின்பு வெளிவரும் இந்த ஹரா திரைப்படம் வெற்றி அடைய அனைவரின் ஆதரவும் தேவை…நன்றி

    Reply

Leave a Comment