The Indian Times

5 ரூபா இடியாப்பத்துக்காக நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாண புகைப்படத்தை விளம்பரம் செய்த ஹோட்டல்…

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.

Advertisement

இருவரும் அடிக்கடி கோவில் மற்றும் சுற்றுலா சென்று புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.இவர்கள் பதிவேற்றும் இந்த புகைப்படங்கள் தான் அன்று இணையத்தில் பேசப்படும் முக்கிய பேசுபொருளாக மாறுகிறது,அந்த அளவிற்கு இவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.எப்பொழுது இவர்கள் திருமணம் செய்துகொள்ளுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.ஜூன் 9 ஆம் தேதி இன்று இருவருக்கும் திருமணம் என இரண்டு நாட்களுக்கு முன்னதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.அதன்படி சென்னையில் இன்று மகாபலிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

Advertisement

இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.தற்போது ஹோட்டல் ஒன்று தங்களது கடை இடியாப்பத்திற்காக விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண புகைப்படத்தினை பயன்படுத்தியுள்ளது.இந்த விளம்பரம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.அதில் காத்திருந்து கரம் புடிச்சாரு விக்கி,எங்க இடியாப்பத்தை சாப்பிட்டா போவீங்க சொக்கி என வசனங்களுடன் வடிவமைத்துள்ளார்.இதனை கண்ட நெட்டிசன்கள் வெறும் வாய்க்கு கிடைத்த தீனி போல இதனை கேலி செய்து இணையத்தில் வெகுவாக ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in