என்ன நிறைய பேர் கிண்டல் பண்ணுனாங்க..வார்த்தையில் வேதனையுடன் பேசிய கமல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிய திரைப்படம் விக்ரம் .இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா கடைசி 3 நிமிடங்களில் முக்கிய காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார்.கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.கமல்ஹாசன் ரசிகர்கள் படத்தினை கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

என்ன நிறைய பேர் கிண்டல் பண்ணுனாங்க..வார்த்தையில் வேதனையுடன் பேசிய கமல் 1

விளம்பரம்

படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.உச்ச மகிழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவர் காணப்படுவதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.நேற்று சென்னையில் இப்படத்தின் வெற்றிகொண்டாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் உலகநாயகன்,விஜய் சேதுபதி,அனிருத்,லோகேஷ் கனகராஜ்,உதயநிதி ஆகியோருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

என்ன நிறைய பேர் கிண்டல் பண்ணுனாங்க..வார்த்தையில் வேதனையுடன் பேசிய கமல் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் நேற்று பேசிய உலகநாயகன் கூறியதாவது,டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொழுது என்னை கிண்டல் செய்தார்கள்,பலரும் எனது கையை பிடித்துக்கொண்டு தயவு செய்து சின்னத்திரை பக்கம் போகாதீங்க என கூறினார்கள்.அந்த நிகழ்ச்சியின் மூலம் நான் தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்குள் சென்றேன்,எனது படத்தின் ப்ரோமோஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே ஆரம்பமாகி விட்டது.அந்த படம் தற்போது விக்ரம் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.நிகழ்ச்சிக்கு பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து சாப்பாடு வழங்கப்பட்டது.கமல்ஹாசன் ,உதயநிதி,லோகேஷ் மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

விளம்பரம்

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment