பாபநாசம் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாரா கமல்ஹாசன்? வெளியானது ஷாக் அப்டேட் இதோ!

விளம்பரம்
விளம்பரம்

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், மீனா, கலாபவன் மணி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து 2013-ல் வெளியாகி வசூலை அள்ளி குவித்த படம் திரிஷ்யம். இந்த படம் முழுக்க முழுக்க சுவாரஸ்யமான காட்சிகளால் நிறைந்திருக்கும். பார்ப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகாதவாறு அமைந்ததாலேயே இந்த படம் வெற்றி படமாக மாறிய முக்கிய காரணமாகும்.

பாபநாசம் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாரா கமல்ஹாசன்? வெளியானது ஷாக் அப்டேட் இதோ! 1

விளம்பரம்

 

இதை பல மொழிகளில் ரீமேக் செய்தனர். அதில் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடித்தனர். இந்த படத்தையும் மலையாள படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இயக்கினார். இந்த படமும் தமிழில் அனைவராலும் வரவேற்கப்பட்டது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  யாக்கை திரி பாடலுக்கு VIBE-ல் ஆட்டம் போட்ட த்ரிஷா மற்றும் சித்தார்த்

பாபநாசம் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாரா கமல்ஹாசன்? வெளியானது ஷாக் அப்டேட் இதோ! 2
சில காலங்களுக்கு முன்பு திரிஷ்யம் 2 படம் OTT தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது. இதை தமிழிலும் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் வந்தனர். ஏற்கனவே பல மொழிகளில் இந்த திரிஷ்யம் 2 ரீமேக் தொடங்கினாலும் தமிழில் அப்படியே இருந்ததன் காரணம் கமல்ஹாசனின் தீவிர அரசியல் பயணம் என்பது அனைவரும் அறிந்ததே!

கட்டாயம் படிக்கவும்  வஞ்சம் அரண்மனை புகுந்தது...பாகுபலியை தூக்கியடித்த பொன்னியின் செல்வன் TRAILER இதோ

பாபநாசம் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாரா கமல்ஹாசன்? வெளியானது ஷாக் அப்டேட் இதோ! 3

விளம்பரம்

அதனால் தேர்தல் முடிந்தால் தான் தெரியும் என்று இருந்த நிலையில் தேர்தலில் கமல் மற்றும் அவர்கட்சியில் இருந்த அனைவரும் படுதோல்வி அடைந்தனர். இதனால் மீண்டும் நடிக்க அவர் வருவார் என குறிப்பிட்டு இருந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் சில பிரச்சனைகள் காரணமாக வழக்குகளையும் சந்தித்து வந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் தற்போது ஜீத்து ஜோசப் உடன் பாபநாசம் 2 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் ஒரு மாதம் மட்டும் தனக்கு கொடுத்தால் போதும் படத்தை முடித்துவிடலாம் என கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப கமல்ஹாசன் ஒப்புக்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment