“தளபதி 65ல நான் இருக்கன்” உறுதிசெய்த பிரபல நடிகர்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி கலக்கியது. இதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். தற்போது இந்த படத்தை பற்றிய மற்றுமொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியாவுடன் ரொமென்ஸ் செய்யும் இயக்குனர் அட்லீ

"தளபதி 65ல நான் இருக்கன்" உறுதிசெய்த பிரபல நடிகர்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்த படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. இன்று எந்த இயக்குனர் படம் எடுத்தாலும் தன் படத்திற்காக நகைச்சுவை நடிகர் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை பற்றி யோசித்தால் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருபவர் யோகி பாபுவாக தான் இருப்பார்.

கட்டாயம் படிக்கவும்  VIJAY ANTONY-ன் ROMEO படத்தின் FIRST SINGLE வெளியாகியது

"தளபதி 65ல நான் இருக்கன்" உறுதிசெய்த பிரபல நடிகர்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 2

விளம்பரம்

ஒரு காலத்தில் காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் , வடிவேலு , விவேக் , சந்தானம் ஆகியோர் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். ஆனால் இன்றோ சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் புடித்த காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. படத்தில் இவர் காமெடி நடிகராக யோகி பாபு நடித்தாலே அதற்கென்றே மக்கள் படத்தை பார்க்க வருகிறார்கள்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் தங்கம் போல ஜொலிக்கும் சச்சின் மகள் சாரா

"தளபதி 65ல நான் இருக்கன்" உறுதிசெய்த பிரபல நடிகர்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 3

விளம்பரம்

தற்போது இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் ஹேர்ஸ்டைல் பார்த்தே சிரித்து விடும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் இவரிடம் தளபதி 65 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று கூறியுள்ளார் யோகிபாபு. தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

"தளபதி 65ல நான் இருக்கன்" உறுதிசெய்த பிரபல நடிகர்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment