The Indian Times

கிரிக்கெட் விளையாடி பந்தை பறக்கவிட்ட புன்னகை அரசி! சினேகாவின் வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சினேகா. எளிமையான தோற்றத்தில் அறிமுகமான இவர் பின்னர் காலத்தில் புன்னகை அரசி என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மூலமாக கொண்டாடப்பட்டார். முதலில் மலையாளத்தில் நடித்திருந்தாலும் , தமிழ் சினிமாவிற்கு 2000 ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் சினேகா.

Advertisement

பிறகு ஆனந்தம் , புன்னகை தேசம் , உன்னை நினைத்து என்று பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென நிரந்தரமான இடத்தை பிடித்தார் சினேகா. அதன் பிறகு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் கதாநாயகியாகவும் , சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார் சினேகா. இவர் இறுதியாக நடித்த திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு.

Advertisement
Un Samayal Arayil Press Meet with Prakash Raj, Sneha and Ilaiyaraaja

இந்நிலையில் தற்போது புன்னகை அரசி சினேகா கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இயக்குனர் வெங்கட் பிரபு , நடிகர் பிரெசன்னா, நடிகர் ஷாம் , மாஸ்டர் மஹேந்திரன் என பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில் சினேகா பந்தை பறக்கவிடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in