The Indian Times

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அதிரடி Entry கொடுத்த KamalHassan…..ஆச்சரியமடைந்த போட்டியாளர்கள்

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்..அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார்,அமீர் மற்றும் பாவனி என பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தற்போது அவர் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிஸியாக வேலை செய்து வருகிறார்.பல வெளிநாடுகளுக்கும் சென்று படம் குறித்து ப்ரோமோஷன் செய்து வருகிறார்.அதன்படி அண்மையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் உலக நாயகன்.அதன்படி தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் யாரும் எதிர்பார்க்காதபடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளார்.இந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : Vijaytelevision 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in