The Indian Times

தமிழ் சினிமா 1000 கோடி ரூபாய் வசூலை தொடவில்லையே ஏன் என்ற கேள்விக்கு?…பளிச் என பதில் கூறிய கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கோலிவுட்டில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.அதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடலான பத்தலை பத்தலை எனும் பாடலை கமல்ஹாசன் இப்படத்தில் எழுதி பாடியுள்ளார் இப்பாடலும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது.ஆண்டவர் இதில் போட்டுள்ள குத்தாட்டம் படத்தின் எதிர்பார்ப்பினை கூடுதலாக்கியுள்ளது.விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

Advertisement

இதனால் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்காக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.இந்த சந்திப்பின் போது,பிற மொழி படங்கள் 1000 கோடி வரை வசூலித்துள்ளது,தமிழில் ஏன் இதுவரை 1000 கோடி வரவில்லை அதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது,அதற்கு பதில் கூறிய கமல் ஒருவர் செய்ய கூடிய வெற்றி இல்லை சினிமா,200 பேரில் ஒருவர் தவறு செய்தால் கூட சினிமா கெட்டுபோய்விடும்.தோல்வி வரும்போது ஒரு ஆளை காட்டுவது தவறு,தயாரிப்பாளரும் நம்பி தான் படம் தயாரிக்கின்றனர்.சில தொடர் தவறுகளால் சில சமயங்களில் தவறாகும் என கூறியுள்ளார்.

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in