The Indian Times

அப்பா அம்மா பண்ற காரியமா இது..ஊரே சிரிக்குது….நகைச்சுவையாக வெளியாகிய வீட்ல விஷேசங்க trailer

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார்.ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும்.இவருக்கென தனி ஸ்டைல் உள்ளது,அதன் மூலம் மக்களை எளிதாக சிரிக்க வைக்க கூடியவர் இவர்.

Advertisement


தற்போது ஆர்.ஜே.பாலாஜி வீட்ல விசேஷங்க என்கிற புதிய படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று அபர்ணா நடித்துள்ளார்,மேலும் சத்யராஜ்,ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.போனி கபூர் இப்படத்தினை தயாரித்துள்ளார்.ஜூன் மாதம் 17-ந் தேதி முதல் உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.வழக்கம் போல் ஆர் ஜெ பாலாஜிக்கென உரித்தான காமெடி கலந்த படமாக உருவாகியுள்ளதை ட்ரைலரில் காண முடிகிறது.2018ம் ஆண்டு வெளியான ஹிந்தியில் வெளியாகிய ‘பதாய் ஹோ’ என்ற படத்தின் ரீமேக் தான் இப்படம் என்றாலும் ட்ரைலரை பார்க்கும் பொழுது அந்த படத்தினை விட சூப்பராக இருக்கும் என தோன்றுகிறது.

Embed video credits : ZEE STUDIO

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in