The Indian Times

ஆரம்பிக்கலாமா….நடிகர் Soori-யின் Mass Entry..ஆக்சன் ஹீரோவா மாறிட்டாரு நம்ம சூரி…

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெட்ரா பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,அன்றுமுதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.

Advertisement

தற்போது தனது கடின உழைப்பினால் இன்று முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளார்,பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்துவிட்டார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.தற்போது இவர் விக்ரம் படத்தின் தீம் பாடலில் மாஸ்ஆக என்ட்ரி கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் வேறே லெவலில் உள்ளீர்கள்,நீங்கள் ஏன் ஆக்சன் ஹீரோவாக நடிக்க கூடாது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in