The Indian Times

மேடையில் RANVEER SINGH உடன் ROMANCE நடனமாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்

பிரபல நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ்.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் தாயை போல் பிரபல நடிகை ஆக வேண்டும் என்ற கனவுகளோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் கீர்த்தி சுரேஷ்.இவர் 2000ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகிய பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகில் கால் தடம் பதித்தார்.இதனை தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.இவர் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தமிழில் இவர் ரஜினிமுருகன் படத்தின் மூலம்தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை வெகு அதிகமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார்.அண்மையில் நடிகர் மகேஷ் பாபுக்கு ஜோடியாக இவர் நடித்த சர்க்காருவாரி பட்டா திரைப்படம் தெலுங்கில் பிரமாண்ட வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் எகிறியுள்ளது.அதேபோல் தற்போது மலையாளத்தில் இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் டோவினோ தாமஸ் உடன் இணைந்து வாஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது பல மொழிகளிலும் நடிகையாக கலக்கி வருபவர் கீர்த்தி சுரேஷ்.அண்மையில் இவர் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.மேடையில் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி இருவரையும் நடனமாட சொல்ல,உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொறப்பொண்ணு என்று பாடலுக்கு கியூட் ஆக நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த கீர்த்தி ரசிகர்கள் சூப்பர் என கூறி கருத்து தெரிவித்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in