செம்ம அடி…நான் GYM-க்கு வரமாட்டேன்…ஓடி கட்டிலில் இருந்து விழுந்த நடிகை ஜெனிலியா

நடிகை ஜெனிலியா தமிழில் குறைந்த அளவு படங்களே நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான நடிகை.காரணம் அவர் நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் அப்படி.துஜே மெரி கசம் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகை ஜெனிலியா.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய பாய்ஸ் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.அதை சரியாக பயன்படுத்தி தமிழில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் ஜெனிலியா.இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார் ஜெனிலியா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் செம்ம மாஸான புகைப்படம் எடுத்த அட்லீ

செம்ம அடி...நான் GYM-க்கு வரமாட்டேன்...ஓடி கட்டிலில் இருந்து விழுந்த நடிகை ஜெனிலியா 1

விளம்பரம்

பின்னர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய சச்சின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதிலும் நடித்து அசத்தினார்.பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.குழந்தை போல நடித்து அனைவரையும் அசத்தினார் ஜெனிலியா.தமிழில் இவருக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை என்று தான் கூற வேண்டும்.இறுதியாக மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் படத்தில் நடித்தார் அதன் பின்னர் அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  இளையத்திலகம் பிரபுவுக்கு மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய ரோபோசங்கர்

செம்ம அடி...நான் GYM-க்கு வரமாட்டேன்...ஓடி கட்டிலில் இருந்து விழுந்த நடிகை ஜெனிலியா 2

விளம்பரம்

நடிகர் ரித்திஷை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.திருமணத்திற்கு பிறகு சிறிது இடைவெளிவிட்ட இவர் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர்,அடிக்கடி புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இவர் குறும்பு தனத்தினை காணவே இவரை 1 கோடி பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடருகின்றனர்.இவர் வெளியிடும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருவதால் தொடர்ந்து ஜெனிலியா வீடியோவை வெளியிட்டு வருகிறார்.தற்போது ஜிம்க்கு உடற்பயிற்சி செய்ய வரமாட்டேன் என ஓடி கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்,நல்ல வேலை இதில் இவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை,இதனை நகைச்சுவை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  ஜீவானந்தத்தை சுட போறாங்க... அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment