The Indian Times

வசூலில் உச்சத்தினை தொட்ட விக்ரம்…ஆண்டவர் கணக்கையே தப்பாக்கி அதிரடி வசூல் செய்த விக்ரம்

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.திரையரங்கில் 25 நாட்களை தாண்டியும் வெற்றிநடை போட்டு ஓடிக்கொண்டு வருகிறது.

Advertisement

உலகம் முழுவதும் வசூல் வேட்டையை இப்படம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் பாகுபலி வசூல் சாதனையை குறைந்த நாட்களிலேயே முறியடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.படம் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் கமல்ஹாசன் உச்ச மகிழ்ச்சியில் உள்ளார்.மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

Advertisement

இப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.இப்படம் 200 கோடி வரை மட்டுமே வசூல் செய்யும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் 400கோடி வரை வசூல் பெற்று சாதனை படைத்துள்ளதாம் விக்ரம்.அண்மையில் உலகநாயகன் என்னை நடிக்க விட்டால் 300 கோடி சம்பாதிப்பேன்,இதோ விக்ரமில் வந்துகொண்டிருக்கிறது என தெரிவித்தார் தற்போது அவரது கணக்கினையும் பொய்யாக்கி விக்ரம் 400 கோடி வரை வசூல் செய்துள்ளது.இதனால் உலகநாயகன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in