The Indian Times

வாய மூடு..போலீசை கூப்பிடுவேன்..மீண்டும் என்னமா ராமராக மாறிய ராமர் | KPY CHAMPIONS

விஜய் தொலைக்காட்சி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.விஜய் டிவி பலரின் திறமைகளை கண்டறிய பெரும் கருவியாக உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரிடமும் இருக்கும் திறமைகளை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை புகழின் உச்சியில் தூக்கி உட்கார வைக்கிறது.அந்தளவிற்கு பல திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.விஜய் தொலைக்காட்சியில் உள்ள பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இதில் கலந்துகொண்டு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை வெகுவாக சிரிக்க வைக்கின்றனர்.நிகழ்ச்சியில் நடுவராக மதுரை முத்து,அர்ச்சனா மற்றும் ரோபோ சங்கர் உள்ளனர்.போட்டியாளர்கள் மத்தியில் நடுவர்கள் செய்யும் நகைச்சுவையும் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் விதமாக தான் அமைந்துள்ளது.அண்மையில் மதுரை முத்து இந்த நிகழ்ச்சியில் செய்த நகைச்சுவையை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்த போட்டியில் ராமர் மற்றும் அறந்தாங்கி நிஷா இணைந்து நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைத்து வருகின்றனர்.தற்போது ராமர் இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார் தொகுப்பாளினி அர்ச்சனா ஆங்கிலத்தில் பேச,அதற்கு பதிலை ஆங்கிலத்தில் தப்பு தப்பாக ராமர் பேசி அரங்கத்தினை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்.அதுமட்டுமின்றி அவரது பேமஸ் வசனமான போலீசை கூப்பிடுவேன் என்பதையும் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இதனால் ராமர் நகைச்சுவையை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in