CHEF DAMU உடன் ஆட்டம் போட்ட மணிமேகலை…அப்பா மேல எவ்வளவு பாசம் மணிமேகலைக்கு

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

CHEF DAMU உடன் ஆட்டம் போட்ட மணிமேகலை...அப்பா மேல எவ்வளவு பாசம் மணிமேகலைக்கு 1

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.அந்தளவிற்கு மணிமேகலை மக்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

CHEF DAMU உடன் ஆட்டம் போட்ட மணிமேகலை...அப்பா மேல எவ்வளவு பாசம் மணிமேகலைக்கு 2

விளம்பரம்

இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இடைவெளியில் மணிமேகலை தனது கலாட்டாக்களை வீடியோவாக வெளியிடுவார்,இதனை காண்பதற்கே தற்போது பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது இவர் செஃப் தாமு உடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடனமாடி வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,மேலும் இந்த வீடியோவை பதிவிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் ரசிகர்கள் தாமு அப்பா நல்ல ஆடுறாரு,மணிமேகலை அக்கா சூப்பர் என கருத்து தெரிவித்து வீடியோவுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment