The Indian Times

கொஞ்சும் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசிய க்ரீத்தி ஷெட்டி …செம்ம CUTE

உப்பெண்னா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கீர்த்தி ஷெட்டி.இதுதான் இவருக்கு முதல் தெலுங்கு படம் ஆகும்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து இவருக்கென தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களான நானியின் ஷியாம் சிங்கா ராய் மற்றும் நாக சைதன்யாவின் பங்கராஜு படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தெலுங்கு சினிமாவிற்கு புதிய அழகிய நடிகை கிடைத்துள்ளது அங்குள்ள ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து மேலும் பட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழில் ரசிகர்கள் உள்ளனர்.தற்போது இவர் ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ள தி வாரியார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்..இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடலான புல்லட் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக தமிழ் சினிமாவில் களம் இறங்க உள்ளார்.முதலில் ஷியாம் சிங்கா ராய் இவருக்கு தெலுங்கில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது போல உப்பெண்ணா படத்திற்கு தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.அந்த அளவிற்கு தனது நடிப்பினால் அனைவரையும் ஈர்த்துள்ளார்.

Advertisement

தற்போது இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.தனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது எனவும்,கற்றுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க இப்போவே சூப்பரா தான் தமிழில் பேசுறீங்க என கூறி கருத்து தெரிவித்து வீடியோவிற்கு லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.தற்போது கீர்த்தி தமிழில் நேரிடையாக படம் நடிக்காமலேயே இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது சூர்யா உடன் இவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வெளியாகினால் நிச்சயம் நல்ல வரவேற்பினை இவர் தமிழில் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

https://www.youtube.com/watch?v=60234NOp6fE&feature=youtu.be

Embed video credits : GALATTA TAMIL

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in