The Indian Times

யம்மா தூக்கிட்டு போற வரைக்கும் சும்மா இருந்துருக்க.. வாங்க வேண்டிதானே.. ஸ்ருத்திகாவிடம் சிக்கி சீரழிந்த குரேஷி

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.

Advertisement

கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் ரவுண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த சுற்றில் இதற்கு முன்பு சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களான ஷகீலா,பவித்ரா,தீபா மற்றும் ரித்திகா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வார நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.கோமாளிகள் வாரம் வாரம் அதிக நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைத்து வருகின்றனர்.கடந்த வார நிகழ்ச்சியில் மணிமேகலை இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்துள்ளது.இருப்பினும் அவர் இடத்தினை நிரப்பும் விதத்தில் குரேஷி,பாலா ஆகியோர் இறங்கி விளையாடியுள்ளனர்.இந்த வார நிகழ்ச்சிக்கு மக்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்

https://www.youtube.com/watch?v=k23AeG0ZOJ8&ab_channel=VijayTelevision

Embed video credits : vijay television 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in