வசூலில் சக்கை போடு போடும் விக்ரம்..பாகுபலியை தூக்கி சாப்பிட்ட விக்ரம் வசூல்

விளம்பரம்
விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ,காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார் .இப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது விக்ரம்.படத்தினை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கூறுவது ஒன்றே ஒன்று தான் தமிழ் சினிமா மீண்டும் உயர்ந்துவிட்டது என்றுதான்

வசூலில் சக்கை போடு போடும் விக்ரம்..பாகுபலியை தூக்கி சாப்பிட்ட விக்ரம் வசூல் 1

விளம்பரம்

படம் வெளியாகி நல்ல வசூலை உலகம் முழுவதும் பெற்று வருவதால் மகிழ்ச்சியில் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு புதிய கார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார் மேலும் அவரது 13 துணை இயக்குனர்களுக்கும் பைக்குகளை வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக அளித்துள்ளார் கமல்ஹாசன்.அண்மையில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் வீமர்சையாக கொண்டாடினர்.நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கறி விருந்து வைக்கப்பட்டது.தற்போது கமல் தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ள.விரைவில் விக்ரம் 3 ஆம் பாகம் வெளியாகும் என உறுதி கூறியிருக்கிறார்.

வசூலில் சக்கை போடு போடும் விக்ரம்..பாகுபலியை தூக்கி சாப்பிட்ட விக்ரம் வசூல் 2

விளம்பரம்

உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகின்றனர்.அண்மையில் உலகநாயகன் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரம் வசூல் 300கோடியை தொட இருப்பதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் 3 வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரூ.365 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பாகுபலி படத்தின் தமிழக வசூலையும் தோற்கடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்கிற பட்சத்திலும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு ராஜ்கமல் நிறுவனத்திடம் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment