The Indian Times

FATHERS DAY-க்காக அப்பாவை படாதா பாடு படுத்திய MAINA NANDHINI

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

தற்போது இவர் தனது யூடியூப் சேனலில் தனது தந்தையுடன் தந்தையர் தினம் கொண்டாடியதை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் தனது தந்தை குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்,ஒரு நாள் கூட வேலைக்கு லீவு போடாமல் எங்களுக்காக தினம்தோறும் உழைத்தார் என கூறி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.மேலும் அவருடன் இணைந்து லூட்டி அடித்து அவரை நகைச்சுவையாக கலாய்த்துள்ளனர்.அவருடன் இணைந்து தந்தையர் தினம் கொண்டாடியுள்ளார்.இந்த வீடியோவை தற்போது தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் இவரது தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Embed video credits : Myna Nandhini

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in