The Indian Times

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு ஜித்தன் ரமேஷ் உடன் குத்தாட்டம் போட்ட BIGG BOSS சம்யுக்தா

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகியவர் சம்யுக்தா.இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது.தற்போது கணவரை பிரிந்து தனது குழந்தையை தானே கவனித்து தனியாக வாழ்ந்து வருகிறார்.மாடலிங் துறையில் இருந்த சம்யுக்தாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.மேலும் சென்னையில் சொந்தமாக சலூன் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார் இவர்.இவரின் கதை பல பெண்களுக்கும் முன் உதாரணமாக உள்ளது என்றே கூறலாம் தவறில்லை,அந்தளவு ஆணின் துணை இல்லாமல் தனியாக மகனையும் வளர்த்து சம்பாதித்தும் வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் காரி படத்தில் சிறிய வேடம் இவருக்கு கிடைத்தது.கிடைத்ததை சரியாக பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.இப்படத்திற்கு பின்னர் இவருக்கு வேறு படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை காலங்கள் ஓடின இந்நிலையில் ஓராண்டுக்கு மேல் கழித்து தற்போது தளபதி விஜயின் 66வது படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.இதனால் சம்யுக்தா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.இவருக்கு இவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இத்தனை நாட்கள் காத்திருந்தாலும் தளபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது சம்யுக்தாவிற்கு கிடைத்த வெற்றி ஆகும்.

Advertisement

இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நடனத்திறமையை மக்களிடம் காண்பித்து அசத்தினார்.இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜித்தன் ரமேஷ் உடன் இணைந்து நடனமாடி வந்தார்.இந்நிலையில் விக்ரம் படத்தில் பிரபலமாகிய சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு ஜித்தன் ரமேஷ் உடன் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் இவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.இவர் தனது இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை வைத்துள்ளார்,இவர் எந்த வீடியோ பதிவிட்டாலும் அதனை இவரது ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருவதால் தொடர்ந்து சம்யுக்தா வீடியோ பதிவிட்டு வருகிறார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in