நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.நானும் ரவுடி தான் படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு ஆனது தற்போது காதலாக மாறி திருமணத்தில் முடிந்துள்ளது.இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றது.மேலும் முக்கியமான நபர்களுக்கு மட்டும் தான் திருமணத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.குடும்பத்தினர் திரைபிரபலங்கள் என 200 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்து மணமக்களை ஆசிர்வதித்துள்ளார்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாகவும் இவர்கள் திருமணத்தில் வீடியோவை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் வெளியில் இருந்து வேறு எவரும் வந்துவிடாத படி பாதுகாப்பு பலமாக இருந்தது.மேலும் கலந்துகொள்ளும் பிரபலங்களிடம் பத்திரிகை இருந்தால் மட்டுமே அனுமதி எனவும் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பாதுகாப்பிற்காக 80 பவுன்சர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் திருமணம் முடிந்து அடுத்தநாள் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு விருந்துக்கு சென்றுவிட்டார்கள்.தற்போது அங்கு இருந்து அவர்கள் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள்.இதனை வீடியோ எடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.வீடியோவை பார்க்கும்பொழுது தாய்லாந்து ஹோட்டலில் இருப்பது போல் உள்ளது.இதனால் அவர்கள் அங்கு ஹனிமூன் சென்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in