The Indian Times

போட்றா வெடிய…தளபதி 66 FIRST LOOK வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கு தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இவர் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம்.நடிகர் விஜய் அண்மையில் நடித்து வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் ஆனது ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.விஜய் ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தாலும் சினிமா ரசிகர்களுக்கு படம் திருப்தியை அளிக்கவில்லை.இருப்பினும் படம் வசூலில் எந்த குறைவும் இல்லாமல் அள்ளி குவித்தது.இப்படத்தினை தொடர்ந்து அடுத்த படத்தில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும் என கவனமாக தளபதி 66ல் நடித்து வருகிறார் விஜய்.

Advertisement

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் விஜய் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.முதல்முறையாக சரத்குமார் நடிகர் விஜயுடன் இணைகிறார்.இப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார்.படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பிற்காக தளபதி அடிக்கடி விமான நிலையம் செல்லும் பொழுது வெளியாகும் புகைப்படங்களை வைத்து தளபதி விஜய் தற்போது படப்பிடிப்பில் இருக்கிறாரா அல்லது வீட்டில் இருக்கிறாரா என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

Advertisement

இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள்.இதனை கொண்டாட ரசிகர்கள் தற்போது தயாராகிவிட்டனர்.விஜயின் படங்களை மீண்டும் திரையரங்குகள் வெளியிட்டு விஜய் பிறந்தநாளை கொண்டாட உள்ளது.இந்நிலையில் தளபதி 66 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகுமா என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.இதனால் ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் தளபதி விஜயின் இந்த படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் இப்பொழுதே யோசிக்க தொடங்கிவிட்டனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in