The Indian Times

என்கிட்டே வராதம்மா நீ…மணிமேகலையால் கடுப்பாகிய ராகுல் தாத்தா | COOK WITH COMALI

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளராக போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதுவரை வெளியே சென்ற போட்டியாளர்களுக்காக மீண்டும் வைல்ட் கார்ட் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.இந்த போட்டியில் சந்தோஷ் மற்றும் கிரேஸ் கருணாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இந்த போட்டியில் ராகுல் தாத்தாவுக்கு கோமாளியாக மணிமேகலை வந்துள்ளார்.மணிமேகலைக்கும் ராகுல் தாத்தாவுக்கும் இடையே பெரும் போராட்டமே நடைபெற்றுள்ளது.இது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்துள்ளது.

மணிமேகலை வேலை செய்யாததால் எரிச்சலடைந்துள்ள ராகுல் தாத்தா மணிமேகலையிடம் கடுகடுவென நடந்துள்ளார்.சிவாங்கி தாத்தாவுக்கு உதவ சென்ற பொழுது அவரிடம் கனிவுடன் நடந்துள்ளார்,இதுகுறித்து மணிமேகலை தாத்தாவிடம் கேட்ட பொழுது,நீ என்கிட்டே வராதம்மா என கோபமாக பேசியுள்ளார்.இது பெரும் நகைச்சுவையாக அமைந்துள்ளது.கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது . இந்த நிகழ்ச்சி தொகுப்பு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

https://www.youtube.com/watch?v=6UjrgO_ioo4&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in