சுப்பிரமணியபுரம் பரமனாக மாறிய சசிகுமார்…..மிரட்டி எடுத்த காரி TRAILER

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிகராக நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெறுவதால் சரி இதனையே தொடர்ச்சியாக சில காலங்கள் செய்வோம் என தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

சுப்பிரமணியபுரம் பரமனாக மாறிய சசிகுமார்.....மிரட்டி எடுத்த காரி TRAILER 1

விளம்பரம்

அண்மையில் இவருக்கு வெளியாகிய கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் ராஜவம்சம் போன்ற படங்கள் மிக பெரிய தோல்வியை அளித்தன.இருந்தும் முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிற சசிகுமார்.தற்போது அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் ப்ரின்ஸ் பிக்சர் தயாரிப்பில் நடிகர் சசிகுமார் காரி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் அம்மு அபிராமி,ரெடின் கிங்ஸ்லி,சம்யுக்தா,ஜேடி சக்கரவர்த்தி,ஆடுகளம் நரேன்,பாலாஜி சக்திவேல்,ராம் குமார் போன்ற பலரும் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

சுப்பிரமணியபுரம் பரமனாக மாறிய சசிகுமார்.....மிரட்டி எடுத்த காரி TRAILER 2

விளம்பரம்

இப்பட்ட்டத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.ட்ரைலர் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.நீண்ட இடைவெளிக்கு பிறகு முழுக்க முழுக்க சசிகுமார் ஆக்ஷனில் இறங்கி உள்ளதை ட்ரைலரில் காணலாம்.ஜேடி சக்ரவர்த்தி வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.ஊருக்காக போராடும் இளைஞனாக சசிகுமார் படத்தினை தங்கியுள்ளார் என்பது ட்ரைலரை பார்க்கும் பொழுதே தெரிகிறது.இப்படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகளும் இடம்பெற்று அசத்தியுள்ளது.ட்ரைலரை காணும் பொழுதே படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இப்படம் நடிகர் சசிகுமாருக்கு ஒரு நல்ல படமாக சினிமாவில் அவர் மீண்டும் வருவதற்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

விளம்பரம்

Embed video credits : Sony music south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment