The Indian Times

சர்வராக நடித்துள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ! அதுலயும் அவரோட சொந்த பெயரோடவே நடிச்சுருக்காரே.

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களுள் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். ரசிகர்களின் பல்ஸை உணர்ந்து அவர்களுக்கு ஏற்றது போல் படங்களை மாஸாக தயாரிப்பதில் இவர் வல்லவர். இவரது இயக்கத்தில் வெளியான தீணா, கஜினி, துப்பாக்கி , கத்தி ஆகிய திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றியை அடைந்துள்ளது.

Advertisement

முன்னணி நடிகர்களின் திரைப் பயணத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறார். அப்படி பட்ட இயக்குனர் சமீப காலமாக தோல்வி படங்களை தொடர்ந்து கொடுத்து வருவதால் ரசிகர்கள் இவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலும் சரிந்து போனது. கடைசியாக இவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் தோல்வி படமாய் அமைந்தது. இதன் காரணமாக விநியோகஸ்தர்கள் ஏ.ஆர்.முருகதாஸிடம் நஷ்ட ஈடு கேட்டது அனைவரும் அறிந்ததே.

Advertisement

தற்போது இவர் மிகப்பெரிய இயக்குனராக இருந்தாலும் ஆரம்பகாலங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அப்படி பணியாற்றியபோது சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார் முருகதாஸ். இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு அபாஸ் , மற்றும் சிம்ரன் நடித்த பூச்சூடவா என்ற படத்தில் சர்வராக நடித்திருப்பார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in