The Indian Times

ஓவியா நடித்துள்ள முதல் வெப் சீரிஸ் | Merlin

பிக் பாஸின் முதல் சீசனிலேயே அதிக ரசிகர்களை ஈர்த்து , இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ஓவியா. இவர் தமிழ் சினிமாவில் நாளை நமதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஓவியா. தமிழில் முதல் படமே இவருக்கு வெற்றியை தேடி தர, அடுத்தடுத்து படவாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

பின்னர் கலகலப்பு , மெரினா , மூடர்கூடம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் பெருமளவு இவர் நடித்த படங்கள் தோல்வியை தான் கொடுத்தது. பிறகு பிக் பாஸ் சீசன் ஒன்னில் கலந்து கொண்ட ஓவியா அதிகளவில் ரசிகர்களை சேர்த்தார். இவர் தான் இந்த சீஸனின் வெற்றியாளர் என்று நினைத்துக்கொண்டிருந்த போது இந்த நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளிறினார் ஓவியா.

Advertisement

வெளி வந்ததும் பட வாய்ப்புகள் குவித்தாலும் , சரியான கதைகளை தேர்ந்து செய்து நடிக்காத காரணத்தால் இன்று படவாய்ப்புகள் தற்போது கிடைக்கவில்லை. அதிலும் இவர் நடித்த 90.எம்.எல் திரைப்படம் மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதை தொடர்ந்து இவர் இறுதியாக நடித்த திரைப்படம் களவாணி 2. இந்நிலையில் தற்போது இவர் மெர்லின் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. Watch the video belowVideo Embeded Credits to Orange Mittai Youtube Channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in