The Indian Times

படம் வேறே லெவல்..தனுஷ பார்த்தா எங்களுக்கே பயமா இருக்கு…நானே வருவேன் PUBLIC REVIEW

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார்.கலைப்புலி தாணு இப்படத்தினை தயாரிக்க ,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இதனால் ரசிகர்கள் காலை முதல் படத்தினை ஆவலாக கண்டு ரசித்து வருகின்றனர்.

Advertisement

படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.படத்தில் தனுஷ் சைக்கோத்தனமான நடிப்பு தங்களை பயமுறுத்துவதாக தெரிவித்து வருகின்றனர் மேலும் இண்டெர்வெல் காட்சிகள் தாறுமாறாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : TN360

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in