The Indian Times

வில்லன் தனுஷை சமாளிக்க முடியாமல் திணறும் ஹீரோ தனுஷ் ….நானே வருவேன் TEASER இதோ!!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அடுத்ததாக நானே வருவேன் , தெலுங்கில் சார் படம் வெளியாக உள்ளது.தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாக உள்ளது.தற்போது இவர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது

Advertisement

கலைப்புலி தாணு இப்படத்தினை தயாரிக்க ,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசரில் தனுஷ் வழக்கம் போல மிரட்டியுள்ளார்.இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.ரசிகர்கள் படத்திற்கு ஆவலாக எதிர்பார்த்து இருப்பதாகவும்,மேலும் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in