The Indian Times

60 வயதிலும் ஸ்டைலில் அசத்தும் ராதிகா…ப்பா செம்ம MASSஆ இருக்காங்களே

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.நடிகை ராதிகா நடிப்பிற்கு இன்று வரை பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவரை தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாரதி ராஜா தான்.

Advertisement

தற்போது பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.அதன்படி இவர் மேக்கப் போடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே இது ராதிகா தானா எப்படி இன்னும் அப்படியே இருக்காங்க என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்,இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in