நடிகை மீனாவின் பிறந்தநாளை கொண்டாடும் நண்பர்கள்..கவலை மறந்து சிரித்த மீனா

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் சீரியல் ஜனனி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எதிர்நீச்சல் டீம்

நடிகை மீனாவின் பிறந்தநாளை கொண்டாடும் நண்பர்கள்..கவலை மறந்து சிரித்த மீனா 1

விளம்பரம்

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை அளித்தது.பெண் குழந்தையுடன் மீனா செய்வதறியாது கணவர் இறுதி சடங்கில் நிற்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகியது.மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம்

நடிகை மீனாவின் பிறந்தநாளை கொண்டாடும் நண்பர்கள்..கவலை மறந்து சிரித்த மீனா 2

விளம்பரம்

தற்போது அதில் இருந்து படிப்படியாக மீனா மீண்டு வருகிறார்.அதற்கு முழு காரணம் அவரது நண்பர்கள் தான்.மீனாவின் நண்பர்கள் நேற்று மீனா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் மீனாவின் இந்த சிரிப்பினை பார்க்க தான் இத்தனை நாள் ஏங்கினோம் என கூறி வருகின்றனர்.வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மயூவை வீட்டிற்கு அழைத்து வரும் பாக்கியா... கடுப்பாகும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment