The Indian Times

புதுசு கண்ணா புதுசு…அனிருத் இசையில் அன்பே சிவம் பாடலை பாடிய கமல்ஹாசன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தினை கமல்ஹாசன் தயாரித்துள்ளார்,அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

அண்மையில் விக்ரம் படத்தின் முதல் பாடலான பத்தலை பத்தலை எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றது.24 மணி நேரத்திற்குள் 20 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது.நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் இந்த பாடலை எழுதி பாடியுள்ளார்.இதனால் கூடுதல் வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஆனது நேற்று சென்னையில் நேரு அரங்கில்நடைபெற்றது.

Advertisement

இதில் நடிகர் சிம்பு,இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் அனிருத் இசையில் அன்பே சிவம் படத்தில் இடம்பெற்றுள்ள நீ நான் சிவம் பாடலை பாடியுள்ளார்.இந்த பாடலை பாடும் பொழுது கூட்டத்தில் இருந்து அதிக சத்தம் எழுந்தது.கமல் ரசிகர்கள் விசில் அடித்து பாடலை என்ஜாய் செய்தனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/lJJyi3zGvpk

Embed video credits : Filmyhoods

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in