The Indian Times

தமிழ் சினிமாவின் DON சிவகார்த்திகேயன்…..நடிகர் சூர்யாவை பின்னுக்கு தள்ளிய நடிகர் சிவகார்த்திகேயன்..எப்படி தெரியுமா?

போட்டியாளராக அறிமுகமாகி தொகுப்பாளராக உருமாறி இன்று முன்னணி திரை நட்சத்திரமாக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.மெரினா படத்தில் சாதாரண இளைஞனாக அறிமுகமாகி இன்று உச்சநட்சத்திரமாக மாறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.உழைத்தால் முன்னேற முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவர்.பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இவர் ரோல் மாடலாக உள்ளார்.

Advertisement

கோடிகளில் வசூல் புரிந்து வருகிறது இவரது படங்கள்,இதனால் தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டிற்காக காத்திருக்கின்றனர்.இந்நிலையில் அறிமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது.இப்படத்திற்கு மக்களிடம் மற்றும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கையில் நடைபெறுவதை மையமாக வைத்து இப்படத்தினை உருவாக்கியுள்ளதால் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் முதல் நாளில் மட்டும் 9 கோடி ரூபாய் வரை வசூல் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வசூல் விபரம் சரியாக இருந்தால் இப்படம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல்நாள் வசூலை முந்தியுள்ளது.ஏனெனில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் முதல்நாள் தமிழகத்தில் 7 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.இதனால் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் வசூலை முந்திக்கொண்டு சென்று வருகிறார் சிவகார்த்திகேயன்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in