The Indian Times

நேர்ல வரேண்டா….துணிவு வெளியாகும் அதே நாளில் வாரிசு… அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்த படக்குழு

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம்.இவர் நடிக்கும் படங்கள் தற்போது நூறு கோடிகளுக்கு மேல் தான் வசூல்களை செய்து வருகிறது.

Advertisement

இதனாலேயே தயாரிப்பாளர்கள் தளபதி விஜயை வைத்து படம் எடுக்க வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இவர் தற்போது தெலுங்கிலும் கால் தடம் பதிக்க உள்ளார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் நேரிடையாக பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement

இப்படத்துடன் அஜித் நடித்த துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது,இதனால் யார் படம் வெற்றிபெறும் என பெரும் போட்டி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் துணிவு வருகிற 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்திருந்தது.அதன்படி துணிவுக்கு போட்டியாக 11ஆம் தேதி தான் வாரிசும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.பல ஆண்டுகளுக்கு பிறகு துணிவும்,வாரிசும் நேருக்கு நேர் மோத உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in