The Indian Times

படம் பாக்குற நம்ம மூச்சு முட்டி செத்துருப்போம்…O2 படத்தினை விமர்சனம் செய்த BLUE SATTAI MARAN

நடிகை நயன்தாராவிற்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.அதன்படி ஐரா,கொலையுதிர்காலம் மற்றும் நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் ஒரே நாயகி நயன்தாராதான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடித்த நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் ஜி எஸ் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ட்ரீம் வாரியார் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது இப்படம் இன்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

தற்போது இப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,பில்டிங் ஸ்டராங் பேஸ்மென்ட் வீக்குன்னு சொல்ல முடியாது படத்துல பில்டிங்கே இல்லை.என்னால இது வரைக்கும் தான் முடியும் என கை விரிச்சிட்டாரு இயக்குனர்.படத்துல எதுவுமே சுவாரஸ்யமா இல்லை.படத்துல லாஜிக் ஓட்டைகள் அதிகம் உள்ளது.படம் கொஞ்சம் இழுத்திருந்தாலும் நம்ம மூச்சு முட்டி செத்துருப்போம் போல இருக்கு.நயன்தாரா உடைய நடிப்பு நல்லா இருந்தது.படத்தினை மக்கள் பார்க்கும்பொழுது சுவாரசியமான காட்சிகள் வைக்க வாய்ப்பு இருந்து தவற விட்டுட்டாங்கன்னு தோணும் என விமர்சனம் செய்துள்ளார்.

Embed video credits : Tamil talkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in