வெளியாகியது தலைவர் 169 படத்தின் TITLE & TITLE LOOK POSTER

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்.காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு இவர் படத்தினை ரசித்து பார்ப்பவர்களும் உண்டு.அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

வெளியாகியது தலைவர் 169 படத்தின் TITLE & TITLE LOOK POSTER 1

விளம்பரம்

உடல்நிலை சரியாக இல்லாத போதும் ரசிகர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு படத்தினை நடித்து வருகிறார்.வயசாகினாலும் இவரது படங்கள் கோடிகளில் வசூல் சாதனை படைத்தது வருவது குறிப்பிடத்தக்கது.அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியது,பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பினை பெற தவறிவிட்டது.வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான் ஆனால் அதையெல்லாம் சூப்பர் ஸ்டார் கண்டுகொள்ளாமல் அடுத்த படத்தில் மக்களை மகிழ்விக்க முடிவெடுத்து சிறந்த இயக்குனரை தேர்வு செய்ய தொடங்கினார்.அப்பொழுது கோலமாவு கோகிலா,டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் சூப்பர் ஸ்டாருக்கு கதை கூறவே அது அவருக்கு பிடித்து போய்விட்டது.அதன்படி தற்போது ரஜினியின் 169வது படம் உருவாக உள்ளது.சன் பிக்சர் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

வெளியாகியது தலைவர் 169 படத்தின் TITLE & TITLE LOOK POSTER 2

விளம்பரம்

இயக்குனர் நெல்சன் விஜயை வைத்து எடுத்த பீஸ்ட் படம் பெரும் தோல்வியை தந்தது.இதனால் சூப்பர் ஸ்டார் இவர் படத்தில் நடிக்க மாட்டார் என பல்வேறு வதந்திகள் கிளம்பியது.வதந்திகள் அனைத்திற்கும் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது 169 புகைப்படத்தினை பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.நெல்சன் மீது அதிக நம்பிக்கை வைத்து இப்படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூப்பர் ஸ்டார்.தற்போது இப்படத்தின் பெயரினை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்திற்கு ஜெயிலர் என படக்குழு பெயரிட்டுள்ளது.நிச்சயம் சூப்பர் ஸ்டார் இப்படத்தில் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இந்த படத்தின் பெயரினை பார்க்கும் பொழுதே தெரிகிறது.விரைவில் இப்படத்தில் நடிக்கும் மீதி நடிகர்கள் விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கமுடிகிறது

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

வெளியாகியது தலைவர் 169 படத்தின் TITLE & TITLE LOOK POSTER 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment