The Indian Times

அரச நிகழ்ச்சிக்கு வருகை தந்த பொன்னியின் செல்வன் நந்தினி…செம்ம கம்பீரமா இருக்காங்களே ஐஸ்வர்யா ராய்

பல உலக அழகிகள் இருந்தாலும்,இனி வந்தாலும் இந்தியாவில் உலக அழகி என்று சொன்னாலே நியாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான்.இன்று அவர் ரசிகர்களுக்கு உலக அழகி தான்.அழகு மட்டும் இல்லாமல் தனது நடிப்பினால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவருக்கென பல மொழி சினிமாவிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.மேலும் அதே சமயம் நல்ல படங்கள் வந்தால் அதில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்

Advertisement

இப்படம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இன்று சென்னையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஐஸ்வர்யா ராய் வருகை தந்துள்ளார்.ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து அவரை வரவேற்றுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in