The Indian Times

அவள் திருப்பி கொடுப்பாள்..எனக்கு நம்பிக்கை இருக்கு….வனிதா விஜயகுமார் ஆவேசம்

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.அவரின் பெயர் தான் விஜய் ஸ்ரீஹரி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் இவரின் மகன் விஜய் ஸ்ரீ தாயை பிரிந்து தாத்தா விஜயகுமார் வீட்டில் வசித்து வருகிறார்.விஜய் ஸ்ரீ யை தன்னிடம் ஒப்படைக்க வனிதா கூறி விஜயகுமாரிடம் சண்டை இட்டார்.இந்த பிரச்சனை கோர்ட்டு வரைக்கும் சென்றது.இதனால் தந்தை மற்றும் மகளுக்கு இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது.தற்போது வரை இவர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது வனிதா தனது வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.தற்போது படங்கள் நாடகங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் நடிகை மஹாலக்ஷ்மிக்கும் திருமணம் நடைபெற்றது.வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட பொழுது ரவீந்தர் இதுகுறித்து விமர்சனம் செய்து இருந்தார்,இதனால் ரவீந்தருக்கும் வனிதாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.தற்போது திடீரென வனிதா தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்,அதில் மற்றவர் வாழ்க்கையை பார்ப்பதையே பிஸியாக பண்ணிட்டு இருக்காங்க,கர்மா எல்லாருக்கும் திருப்பி கொடுப்பா,எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு என தெரிவித்துள்ளார்.வனிதா யாரையும் இதில் குறிப்பிட்டு சொல்லவில்லை இருந்தாலும் ரசிகர்கள் அந்த பதிவில் கீழே ரவீந்தர் மஹாலக்ஷ்மியை தான் இவர் கூறுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : CINEULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in