தாடியுடன் அச்சு அசல் பிரபுதேவா போல் இருக்கும் அவரது மகன்… ஆச்சரியமடையும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா.இவர் கால் தடம் பதித்த அணைத்து துறைகளிலும் கலக்கினார்.தமிழ் சினிமாவில் இவர் இந்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை ,இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இப்படத்தின் ,மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.தனது நடனத்தினால் பலரையும் இவரது ரசிகர் ஆக்கினார் பிரபு தேவா.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் பட நாயகி ப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தாடியுடன் அச்சு அசல் பிரபுதேவா போல் இருக்கும் அவரது மகன்... ஆச்சரியமடையும் ரசிகர்கள் 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.மேலும் தெலுங்கு படத்தினை இயக்கி இயக்குனராகவும் மாறினார்.தமிழில் இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கிய போக்கிரி படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இதன்மூலம் இயக்குனர் ஆகவும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் பிரபு தேவா.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இயக்குனராக அசத்தியவர்.கடந்த ஆண்டு சல்மான் கானை வைத்து ராதே என்ற படத்தினை இயக்கி இருந்தார்.இப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் பூங்குழலியின் செம்ம மாடர்ன் புகைப்படங்கள்

தாடியுடன் அச்சு அசல் பிரபுதேவா போல் இருக்கும் அவரது மகன்... ஆச்சரியமடையும் ரசிகர்கள் 2

விளம்பரம்

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.தற்போது மறைந்த நடிகர் பாண்டுவின் புகைப்படத்தினை பதிவிட்டு நடிகர் பிரபு தேவா அவரை நினைத்து வருந்தி உள்ளார்.இந்த புகைப்படத்தில் நடிகர் பாண்டுவிடம் பிரபுதேவா மகன் ஆசிர்வாதம் வாங்குவது போல உள்ளது.இதில் நடிகர் பிரபு தேவா மகன் தாடியுடன் அடையாளம் தெரியாமல் பெரிய ஆளாக உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இவர் பிரபுதேவா மகனா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment