The Indian Times

COOK WITH COMALI- நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபலம்..FINAL சென்ற மூவர் யார்…

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.தற்போது இந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரை இறுதி சுற்று போட்டி நடைபெற்றுள்ளது

Advertisement

ஒரு பக்கம் நிகழ்ச்சி விரைவில் முடிய உள்ளது என்று சோகம் ரசிகர்களிடம் கிளம்பியுள்ள நிலையில் இந்த முறை வெல்ல போவது யார் என்ற ஆர்வமும் அதிகமாக உள்ளது.ஸ்ருத்திகா இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் தற்போது இந்த அரையிறுதி போட்டியில் அம்மு அபிராமி, தர்ஷன், வித்யூலேகா,முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சமைத்துள்ளனர்.இந்த வாரம் எலிமினேஷன் சுற்று வந்த தர்ஷன் மற்றும் முத்துக்குமாருக்கு சாக்லேட் செய்ய நடுவர்கள் கூறிய நிலையில் தர்ஷன் வெற்றிபெற்றார்.முத்துக்குமார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.இது அனைவருக்கும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது இருந்தாலும் இவருக்கு மீண்டும் வைல்ட் கார்டு போட்டியில் மீண்டும் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதே ரசிகர்களுக்கு ஒரு ஆதரவாக அமைந்துள்ளது.இதனால் மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in