The Indian Times

நாய் சேகரில் வைகைப்புயல் செய்த தரமான சம்பவம் ..ரிலீசுக்கு தயாராகும் நாய் சேகர்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு மக்கள் மனதில் நிறைந்துள்ளார் வடிவேலு.இவரின் நகைச்சுவைகள் தான் பலருக்கும் மருந்தாகி வருகிறது. இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே சினிமாவில் உள்ளது.காரணம் தனது எதார்த்தமான பேச்சு மற்றும் ஆக்ஷன்களால் மக்களை சிரிக்கவைப்பதில் இவர் வல்லவர் என்பதால்.தற்போது பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்று வரை வடிவேலு இடத்தினை பிடித்தவர்கள் எவரும் இல்லை.நகைச்சுவையின் நிரந்தர புலிகேசி மன்னனாக இன்று உள்ளார்.அவர் படங்களில் நடித்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும் சரி அவருக்கான இடம் தனி

Advertisement

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்

Advertisement

தற்போது இவர் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் வடிவேல் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு பாடல்களை பாடியுள்ளார்.இதனால் ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சியில் உள்ளனர்.இப்படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் தயாராகி உள்ள நாய் சேகர் விரைவில் வெளியாக உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in