We are the boysu….விக்னேஷ் சிவன் திருமணத்தில் சினிமா பிரபலங்கள்…வைரலாகும் திருமண புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.நானும் ரவுடி தான் படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு ஆனது தற்போது காதலாக மாறி திருமணத்தில் முடிந்துள்ளது.இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றது.மேலும் முக்கியமான நபர்களுக்கு மட்டும் தான் திருமணத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.குடும்பத்தினர் திரைபிரபலங்கள் என 200 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர் விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள்

We are the boysu....விக்னேஷ் சிவன் திருமணத்தில் சினிமா பிரபலங்கள்...வைரலாகும் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்து மணமக்களை ஆசிர்வதித்துள்ளார்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாகவும் இவர்கள் திருமணத்தில் வீடியோவை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் வெளியில் இருந்து வேறு எவரும் வந்துவிடாத படி பாதுகாப்பு பலமாக இருந்தது.மேலும் கலந்துகொள்ளும் பிரபலங்களிடம் பத்திரிகை இருந்தால் மட்டுமே அனுமதி எனவும் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பாதுகாப்பிற்காக 80 பவுன்சர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா புகைப்படங்கள்

We are the boysu....விக்னேஷ் சிவன் திருமணத்தில் சினிமா பிரபலங்கள்...வைரலாகும் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது விக்னேஷ் சிவன் தங்களது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகின்றார்.நடிகர் ரஜினிகாந்த்,விஜய் சேதுபதி,சூர்யா,ஷாருக்கான் இயக்குனர் அட்லீ,மணிரத்தினம் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.இவர்கள் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஷாருக்கான் எஸ் ஜே சூர்யா அட்லீ மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment