வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டிய குட்டி விக்ரம்…

உலகநாயகன் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டிய குட்டி விக்ரம்... 1

விளம்பரம்

உலகம் முழுவதும் வசூல் வேட்டையை இப்படம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் பாகுபலி வசூல் சாதனையை குறைந்த நாட்களிலேயே முறியடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.படம் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் கமல்ஹாசன் உச்ச மகிழ்ச்சியில் உள்ளார்.மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டிய குட்டி விக்ரம்... 2

விளம்பரம்

இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் பேரனாக நடித்துள்ள குழந்தை தான் தர்ஷன்.இப்படத்தில் இந்த குழந்தை அடித்து அசத்தியது. அழுக வேண்டிய இடத்தில் அழுது,சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து மக்களின் மனதினை கவர்ந்து மிக பிரபலமாகினார்.இப்படத்தின் படப்பிடிப்பில் குழந்தை நடிகர் கமல்ஹாசன் கூறுவதை அப்படியே கேட்டுள்ளார்,இதனை லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.தற்போது இவர் வேஷ்டி சட்டையுடன் மாஸ் ஆக எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment