The Indian Times

கர்ணன் திரைப்படத்தை 20 வருடத்திற்கு முன்பே இயக்கிய இயக்குனர்! இந்த படம் copy யா?

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய இயக்குனர்கள் பலர் தற்போது கால் பதித்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது சிறந்த இயக்குனராக வளம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் இது தான் இவரது முதல் படமா என்று வியந்து பார்க்க கூடிய அளவிற்கு வெற்றியை தேடி தந்தது. இந்நிலையில் தற்போது இவர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார்.

Advertisement

இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் டீசர் வெளியானபோதே படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான இந்த படம் பெரியளவில் வெற்றிபெற்றது. மாரி செல்வராஜ் முதலில் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை விட பல மடங்கு வசூலை குவித்தது கர்ணன். ஆனால் தற்போது இந்த படத்தின் கதை ஏற்கனவே ஒரு இயக்குனர் மூலம் படமாக்கி விட்டது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

1999 ஆம் ஆண்டு நடிகர் முரளி நடிப்பில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியான படம் தான் இரணியன். இந்த படத்தில் கதாநாயகன் முரளி தன்னுடைய ஒடுக்கப்பட்ட கிராமத்திற்காக போராடும் இளைஞனாக நடித்திருப்பார்.

ஏறக்குறைய கர்ணன் படத்தின் கதையும் அதுதான். இதனால் இந்த இரண்டு படத்தின் கதைகளும் ஒன்று தான் என்று பேசப்பட்டுவருகிறது. இருப்பினும் கர்ணன் திரைப்படம் இன்று பெரியளவில் வெற்றி அடைந்து விட்டது என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in