The Indian Times

நடு ரோட்டில் SANDY MASTER உடன் தரலோக்கல் குத்து குத்திய புகழ்

பல கனவுகளுடன் சென்னை வந்தவர்களில் ஒருவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெறியுடன் போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது..இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

Advertisement

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளார் புகழ்.இவருடன் சாண்டி மாஸ்டரும் சென்றுள்ளார்.அங்கு இருவரும் நடுரோட்டில் மரண குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த வீடியோவை புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in