The Indian Times

BULLET பாடலுக்கு மீண்டும் வெறியாட்டம் போட்ட நடிகை க்ரிதி ஷெட்டி

உப்பெண்னா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகியவர் க்ரிதி ஷெட்டி.இதுதான் இவருக்கு முதல் தெலுங்கு படம் ஆகும்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து இவருக்கென தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களான நானியின் ஷியாம் சிங்கா ராய் மற்றும் நாக சைதன்யாவின் பங்கராஜு படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தெலுங்கு சினிமாவிற்கு புதிய அழகிய நடிகை கிடைத்துள்ளது அங்குள்ள ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.வீடியோ  கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து மேலும் பட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் க்ரிதி  ஷெட்டி.இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழில் ரசிகர்கள் உள்ளனர்.தற்போது இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ள தி வாரியார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தினை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இப்படத்தின் முதல் பாடலான புல்லட் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.இப்பாடலுக்கு ஏற்கனவே ஒருமுறை க்ரிதி நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ மிகப்பெரிய அளவு வைரலாகியது.தற்போது அதனை தொடர்ந்த்து மீண்டும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த க்ரிதி ரசிகர்கள் வீடியோவுக்கு லைக் செய்து பெருமளவு இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.ஏற்கனவே க்ரிதிக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கும் நிலையில் இப்பாடலின் மூலமும் இந்த நடனத்தின் மூலமும் மேலும் ரசிகர்கள் கூட்டம் அவருக்கு அதிகரித்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in