The Indian Times

ஹிந்தியில் நடித்துள்ள சந்தானம்! அதுவும் யாரும் எதிர்பார்த்திராத இந்த கமல் கெட்டப்பில். வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியின் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் , தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம்.

தமிழ் படங்களை spoof செய்து காமெடி நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெட்ரா நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடியனாக கிடைத்தவர் சந்தானம்.

Advertisement

வடிவேலு , விவேக் என்ற ஜாம்பவான்களுக்கு பிறகு காமெடியில் கலக்கியவர் சந்தானம் தான். பேசாத கண்ணும் பேசும் என்ற படத்தில் முதல் முதலாக நடித்த சந்தானம் மன்மதன் படத்திற்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த காமெடியனாக உருமாறினார். காமெடியனாக நடித்து இன்று முன்னணி ஹீரோவாக வளம் வருபவர் சந்தானம்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்திலிருந்து தற்போது வெளியான பாரிஸ் ஜெயராஜ் படம் வரை ஹீரோவாக கலக்கிவருகிறார் சந்தானம். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஹிந்தியிலும் நடித்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹிந்தியில் சின்னு மண்ணு என்ற திரைப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.இந்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றபெற்ற அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அப்பு என்ற கேரக்டரின் கெட்டப்பில் நடித்த்துள்ளார் சந்தானம். இந்த படத்தினை பற்றி வேறு எந்த தகவலும் தெரியவில்லை ஆனால் சந்தானத்தின் இந்த பூஜிப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in