The Indian Times

“பழைய தல லாம் கெடயாது, இதுவர அவர் நடிக்காத புது Getup ல நடிச்சிருக்காரு” வலிமை update கொடுத்த மாஸ்டர் பட நடிகை!

Watch the video below தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் தல அஜித். தல அஜித்தின் அடுத்த படம் வலிமை மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். போனி கபூரின் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத்தின் அதிரடி த்ரில்லரில் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்காக இசை இயக்குனர் யுவன் சங்கர் ராஜா மற்றும் DOP நீரவ் ஷா ஆகியோரையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Advertisement

படக்குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் முக்கியமான காட்சிகளை சூட் செய்துள்ளது. அதுமட்டுமில்லாது ஸ்பெயின் நாட்டிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா குமகொண்டா, யோகி பாபு, குர்பானி, புகாஜ், அச்சியுத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பது வலிமை படத்தின் first look காக தான்.

Advertisement

ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் first look மே 1 அன்று வெளியிடப்போவதில்லை என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார். இதை கேட்ட அஜித் ரசிகர்கள் மிகவும் சோகமடைந்து விட்டனர். இந்நிலையில் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ள நடிகை சங்கீதா வலிமை படத்தை பற்றி பெரிய அப்டேட் ஒன்று ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

தல அஜித் 10 வருஷம் பின்னாடி போனது போல கெட்டப்பில் இந்த படத்தில் நடித்துள்ளார். இதுவரை அவர் பண்ணாத ஒரு என்று அப்டேட் கொடுத்துள்ளார். இதை கேட்ட தல ரசிகர்கள் தீவிரமாக வலிமை படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். watch the video below 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in