The Indian Times

Hiphop தமிழாவின் Inayam music video | Naa Oru Alien

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக இளைஞர்கள் ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளனர் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன் பின்னர் , இன்று நேற்று நாளை , தனி ஒருவன் , கத்தி சண்டை அரண்மனை 2 என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

அதுவரை இசையமைப்பாளராக இருந்த ஆதி , முதல் முதலில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு அவரே இயக்கியிருப்பார். அதை தொடர்ந்து நட்பே துணை , நான் சிரித்தால் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் ஹிப்ஹாப் ஆதி. இந்நிலையில் தற்போது அன்பறிவு என்ற படத்தில் நடித்துள்ளார் ஆதி.

Advertisement

இந்நிலையில் தற்போது இணையம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஏற்கனவே நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்திலிருந்து நெட் அ தொறந்தா என்ற பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது ஹிப்ஹாப் தமிழ் இசையில் நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்திலிருந்து இணையம் என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in