The Indian Times

காதலனால் கடனில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நயன்தாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டதோடு அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று அணைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடிகை நயன்தாரா. தற்போது இவர் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்தது. விக்னேஷ் சிவன் தமிழில் நானும் ரௌடித்தான், தானா சேர்ந்த கூட்டம் என்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் தற்போது விஜய் சேதுபதி , சமந்தா, நயன்தாரா ஆகியோரை வைத்து காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். தற்போது இவர்களுக்கு நடுவில் நிதி சிக்கல் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குவதை தாண்டி விக்னேஷ் சிவன் கூலாங்கல், நெற்றிக்கண் , ராக்கி ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

அதுவும் நயன்தாரா வாங்கிய சம்பளத்தில் தான் இந்த படங்களை தயாரித்துள்ளார் விக்னேஷ் சிவன் என்று கூறப்படுகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் திரையரங்குகள் ஏதும் திறக்காதால் எந்த படங்களையும் விக்னேஷ் சிவனால் வெளியிட முடியவில்லை. ஓடிடியில் வெளியிடலாம் என்று விக்னேஷ் சிவன் பிளான் போட , இப்படி தயாரித்த அனைத்து படங்களையும் மொத்தமாக ஓடிடிடில் வெளியிட்டால் நஷ்டம் தான் ஏற்படும் என்று நயன்தாரா எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in