The Indian Times

விக்ரம் படம் பார்க்க வந்த அஜித் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

படம் பார்த்த பல ரசிகர்களும் உலகநாயகனை பாராட்டி வருகின்றனர்.மேலும் படம் தமிழ் சினிமாவை மீண்டும் பழையநிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.காலை 4 மணிக்கே திரையரங்குகளில் காட்சிகள் தொடங்கப்பட்டுவிட்டது.நேற்று முதல் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.காட்சிகள் காணாமல் கூடுதலாக திரையரங்குகள் நடு இரவு காட்சிகளை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் விக்ரமினை கொண்டாடி வருகின்றனர்.பல திரை நட்சத்திரங்களும் படத்தினை திரையரங்கு வந்து கண்டு சென்று வருகின்றனர்.

Advertisement

அதன்படி தற்போது அஜித்குமார் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா நேற்று இரவு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் விக்ரம் படத்தினை காண வந்துள்ளனர்.இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர்களை காண ரசிகர்கள் கூட்டமும் அலைமோதியது.பல பிரபலங்களும் படத்தினை வந்து பார்த்துவிட்டு படக்குழுவினரையும் ,உலகநாயகனையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in